நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு 124 பேரின் ஆதரவு
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில்124க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு 124க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் உள்ளது.

அந்த அரசாங்கங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பல கட்சிகள் பங்குபற்றுகின்றன. அந்த குழுக்களின் ஆதரவுடன்124 க்கும் மேற்பட்ட பெரும்பான்மையை பெற முடியும்.இதன் மூலம் சிறந்த அரசாங்கத்தை உருவாக்க முடியுமெனவும்,பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan