விடுதலைப்புலிகளுடனான யுத்தம்: 1200 இந்திய படையினர் பலி- செய்தி தொகுப்பு (Video)
நாட்டில் நடந்த போரில் அனைத்து பிரதேசங்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர் எனவும் ஒரு சமூகத்தையோ, ஒரு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மாத்திரம் அதில் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று (18) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சிறந்த நோக்கத்துடன் புனர்வாழ்வு தொடர்பான சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறுகிய நோக்கத்துடன் இது சம்பந்தமாக அர்த்தப்படுத்துவது பொருத்தமற்றது. போரில் 26 ஆயிரம் படையினர் இறந்தனர், புலிகளின் உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.
நாட்டில் நடந்த பிரிவினைவாத போர் காரணமாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களோ, ஒரு பகுதியை சேர்ந்தவர்களோ பாதிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுடனான போரில் 1200 இந்திய படையினர் மரணத்தினர். 26000 இலங்கை படையினர் உயிரிழந்தனர் எனவும் இதன்போது தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்தி தொகுப்பு
,