2021 இல் 120,000 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் (Sri lanka Bureau of Foreign Employment) பதிவு செய்த, ஒரு லட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் 2021 ஆம் ஆண்டில் வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று நோய் நிலைமையிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்று சென்றுள்ளனர். கத்தாருக்கு 30 ஆயிரம் பேரும், சவுதி அரேபியாவுக்கு 27 ஆயிரம் பேரும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு 20 ஆயிரம் பேரும் சென்றுள்ளனர்.
இதனை தவிர தென் கொரியாவுக்கு ஆயிரத்து 400 பேரும், சிங்கப்பூருக்கு ஆயிரத்து 100 பேரும், சைப்ரஸ் நாட்டுக்கு ஆயிரத்து 600 பேரும், ஜப்பானுக்கு 800 பேரும் தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan