வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட 12 இலங்கையர்கள்: தூதரகம் விடுத்துள்ள கோரிக்கை
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் போது அவர்களது உடல்நிலை தொடர்பில் உறவினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ள சிலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்கப்பட்டதை அடுத்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
உளவியல் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக 12 இலங்கையர்கள் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இதுபோன்ற பாதிப்புகள் உள்ள நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட குடும்பங்களை கேட்டுள்ளார்.
அதேவேளை இஸ்ரேலில் முறையற்ற வகையில் செயற்பட்ட இரண்டு இலங்கையர்கள் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு அமைய நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரு நபர்களும் தங்கள் கடவுச்சீட்டுக்களை இழந்ததால், தூதரகம் இரண்டு தற்காலிக கடவுச்சீட்டுக்களை இலவசமாக வழங்கியதாக தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
