அவுஸ்திரேலியாவில் பசியில் வாடும் 12 லட்சம் குழந்தைகள்! வெளியான மதிப்பீடு
உலகளவில் கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலியாவில் 12 லட்சம் குழந்தைகள் போதிய உணவில்லாமல் தவித்து வருவதாக அவுஸ்திரேலிய உணவு வங்கியின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வேலைக்கு செல்லாதவர்களை காட்டிலும் வேலைக்கு செல்பவர்கள் போதிய உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக உணவு வங்கியின் பசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“சமுதாயத்தில் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ள வீடற்ற மக்கள், வேலைகளற்ற மக்கள் மட்டும் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படவில்லை, பிறரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்பாரா செலவுகள், மற்றும் செலுத்திய வேண்டிய பெரும் கட்டணங்களால் மக்கள் போதிய உணவின்றி தவிக்கின்றனர்,” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்தில் இரண்டுக்கும் அதிகமான குழந்தைகள் வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக
உண்ணாமல் இருப்பதாக 43 சதவீத பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர் என அவுஸ்திரேலியா உணவு வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.