ஜோர்தான் துறைமுகத்தில் விபத்து: 12 பேர் பலி-உலக செய்திகள்
ஜோர்தான் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் மஞ்சள் நிற வாயு கசிந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜோர்தானின் அகுவாபா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் கிரேன் ஒன்றின் உதவியுடன் பெரிய அளவிலான உருளை ஒன்று இறக்கப்பட்டுள்ளது.
இதன்போது திடீரென அந்த உருளை கிரேனில் இருந்து நழுவி கப்பலில் விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில், மஞ்சள் நிற விஷவாயு பெருமளவில் பரவி அந்த பகுதியில் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து, துறைமுக பணியாளர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர். துறைமுகத்திற்கு அருகே உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குடியிருப்பில் வசித்தவர்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகள்,
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan