கட்டுநாயக்க விமான நிலையம் சென்று திரும்பிய வாகனம் விபத்து - 12 பேர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான சாலையில் இன்று காலை பயணித்த வேன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன், லொறியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
விபத்தில் வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன விபத்து
இந்த வேனில் பயணித்தவர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் மாத்தறை முலட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அம்புலன்ஸ்கள் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளூர்வாசிகளும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை எடுத்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




