இந்திய கடற்தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் திங்கட்கிழமை (02.01.2022) உத்தரவிட்டுள்ளது.
சாதாரண சிறைத்தண்டனை
டிசம்பர் 21 ம் திகதி பருத்தித்துறை அருகே இந்திய கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.
12 இந்திய கடற்தொழிலாளர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்ததுடன் படகு மற்றும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களை அரசுடமையாக்க பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய கடற்தொழிலாளர்களையும் 2023 ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த இந்திய கடற்தொழிலாளர்கள்
நான்கு இந்திய கடற்தொழிலாளர்கள் டிசம்பர் 28 நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் இயந்திர கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.
தஞ்சமடைந்துள்ள இந்திய கடற்தொழிலாளர்களை வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தியுள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைக்கு அனுமதி
கோரியநிலையில் நீதவான் நீதிமன்றம் நான்கு இந்தியகடற்தொழிலாளர்களையும் 2023 ஜனவரி
4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.





புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri
