தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி! ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை - அடுத்தது என்ன..!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மும்முனைப் போட்டி உருவாகிய நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக (TVK) முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக, சுமார் 30% வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மும்முனைப் போட்டி
இதன் மூலம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு பெரிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆனால், தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் தற்போது 108 இடங்கள் மட்டுமே இருப்பதால் “தொங்கு சட்டசபை” சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஆட்சியை அமைக்க தவெகக்கு குறைந்தது 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.
இதனால், எந்தக் கட்சியிடம் ஆதரவு கோரப்படும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.
அரசியல் திருப்பம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா? அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் ஆதரவு தருமா? காங்கிரஸ் சில தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், அது தவெகவுக்கு ஆதரவளிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1967க்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாமல் ஒரு புதிய கட்சி முன்னிலை பெறுவது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இன்னும் தெளிவான பெரும்பான்மை உருவாகாத நிலையில், தவெக எடுக்கும் அடுத்த கட்ட முடிவுகள் தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கரமாக இருக்கும்.
இதற்கிடையே, த.வெ.க. வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், காங்கிரஸ் கட்சி த.வெ.க.-க்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5 இடங்கள், தேமுதிக 1, விசிக 2, மதிமுக 2, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளன.
அதிமுக கூட்டணியில் பாஜக 1, பாமக 5, அமமுக 1 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இந்த கட்சிகளின் 23 இடங்களில் 13 இடங்களை பெற வேண்டும். இதற்காக அந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை த.வெ.க.-வுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை.
You may Like THIS..