மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 117 கோவிட் தொற்றாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 117 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பகுதியில் அதிகூடிய தொற்றாளர்களாக 32 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், காத்தான்குடியில் 30 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 08 பேரும், வாழைச்சேனையில் 01,ஓட்டமாவடியில் 04 பேரும்,கோறளைப்பற்று மத்தியில் 14 பேரும்,செங்கலடியில் 08 பேரும்,வவுணதீவில் 06 பேரும்,கிரானில் 01,பொலிஸ் உத்தியோகத்தர்கள் 02 பேர் வேறு மாகாணத்திலிருந்து வந்தவர்கள் 02 என 117 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பேணாமல் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளே தொற்று அதிகரிப்பதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
