சீனி பதுக்கி வைக்கும் பல களஞ்சியசாலைகள் நுகர்வோர் விவகார ஆணையத்தால் சோதனை
சீனிக்கான செயற்கை சந்தை பற்றாக்குறையின் பின்னணியில், சீனி பதுக்கி வைக்கும் பல களஞ்சியசாலைகள் நுகர்வோர் விவகார ஆணையத்தால் சோதனையிடப்பட்டுள்ளன.
கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் ஐந்து குழுக்கள் நேற்று கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் களஞ்சியசாலைகளை சோதனையிட்டுள்ளன.
இதன்போது, ஹேகித்த, எண்டெரமுல்ல, உஸ்வேதகேயாவ மற்றும் ஹேயந்துடுவ பகுதிகளில் உள்ள களஞ்சியங்களில் இருந்து மொத்தம் 11,070 மெட்ரிக் தொன் சீனி மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிறுவனங்கள் அனுமதி பெற்றிருந்தும் 8 மாதங்களுக்கு மேலாக, சீனியை சேமித்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
சதோச நிறுவனத்துக்கு சொந்தமான வத்தளை, எண்டெரமுல்லயில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் இருந்து 5,500 மெட்ரிக் தொன் சீனி அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பிருந்து, களஞ்சியப்படுத்தப்பட்ட 600 மெட்ரிக் தொன் சீனி மீட்கப்பட்டது.
மேலும், வத்தளை ஹேகித்தையில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் இருந்து 1,200 மெட்ரிக் தொன் எடையுள்ள சீனி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹெய்யந்துடுவ பகுதியில் உரிமம் பெற்ற களஞ்சியத்தில் இருந்து மற்றொரு பாரிய அளவு சீனி கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கடந்த 8 மாதங்களில் மொத்தமாக 3,770 மெட்ரிக் தொன் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆகஸ்ட் 30 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த அத்தியாவசிய உணவுகளை வழங்குவதற்கான அவசர விதிமுறைகளை அறிவித்தார்.
நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை பதுக்கி வைப்பதற்கும், அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கும், எதிராக, இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
