தொட்டிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 11 வயது சிறுமி
கேகாலை மாவட்டம் மாலிபொட தோட்டத்தின் நிந்தகம பிரிவில் தொட்டிலில் சிக்கி 11 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தெரணியகலை மாலிபொட தோட்டம் நிந்தகம பகுதியில் வசித்து வந்த 11 வயது கெனோரீடா டில்மினி என்ற சிறுமி நேற்று மாலை 4 மணி அளவில் தனது வீட்டில் உள்ள தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தொட்டிலில் சிக்குண்டு மரணமடைந்துள்ளார்.
குறித்த சிறுமி தொட்டில் சீலையில் சிக்குண்டு தொங்கிக் கொண்டிருந்ததை அறிந்து மீட்கப்பட்டு பின்னர், தெரணியாகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெரணியகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெரணியகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam
