கடுவெலவில் போதைப்பொருள் விருந்தொன்றில் பங்குபற்றிய 11 சந்தேகநபர்கள் கைது
கடுவெல - ரணால பகுதியில் இடம்பெற்ற போதைப்பொருள் விருந்தொன்றில் 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையில் 28-48 வயதுக்கு இடைப்பட்ட அத்துருகிரிய, வத்தளை, வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பெண்களும், 25-44 வயதுக்குற்பட்ட ரணால, பியகம, மருதானை, ஹோகந்தர, அதுருகிரிய, வத்தளை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 7 ஆண்களும் பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 11 சந்தேகநபர்களையும் கைது செய்யும் போது அவர்களிடமிருந்து 6.850 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விருந்து
கைது செய்யப்பட்டவர்களில் பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபரான“சோரா” என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (04.04.2023) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
