வவுனியாவில் மேலும் 11 பேருக்கு கோவிட் தொற்று
வவுனியாவில் மேலும் 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (07.06) வெளியாகின.
அதில், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த நான்கு பேருக்கும், தெற்கு இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், குருமன்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan