யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது நீதம் இதழ்
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு நடைபெற்றுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நேற்றையதினம்(11.07.2026) காலை குறித்த நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
நீதம் இதழ் வெளியீடு
இந்த நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதியரசர் சம்பத் அபேயகோன் பிரதம விருந்தினராகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் கௌரவ விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத்தும் பங்கேற்றிருந்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நீதம் இதழ் வெளியிடப்பட்டு வருவதுடன் இம்முறை பத்தாவது தடவையாகவும் குறித்த இதழ் வெளியிடப்படமை குறிப்பிடத்தக்கது.