நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நேபாளத்தில் உள்ள 109 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என இலங்கை வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய வன்முறைகள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களின் நிலைமை
காத்மண்டுவில் உள்ள இலங்கையர்களின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து அதன் அடிப்படையில் செயற்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து லும்பினி சென்றிருந்த 73 இலங்கை யாத்திரிகர்கள், பின்னர் பாதுகாப்பாக இந்திய எல்லையை கடந்துவிட்டனர். தூதரக அதிகாரிகள் நேபாள குடிவரவுத்துறை அதிகாரிகளுடன் நேரடியாக இணைந்து நடைமுறைகளை விரைவுபடுத்தியுள்ளனர்.
நேபாள இராணுவம் தற்போது பாதுகாப்பை கட்டுப்பாட்டில் கொண்டு, பொதுமக்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
வெளியுறவுத்துறை, நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் அவசியம் இல்லாமல் வெளியில் செல்லாமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அவசர நிலைகளில், காத்த்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளை +977 9851048653 என்ற இலத்துடன் தொடர்புகொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
