வவுனியாவில் 104 வயது மூதாட்டியொருவர் கோவிட் தொற்றால் மரணம்
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக 104 வயது மூதாட்டி உட்பட 11 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 104 வயது மூதாட்டி உட்பட 11 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மரணித்த 11 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா, மூனாமடு கிராமத்தைச் சேர்ந்த 104 வயது மூதாட்டியே மரணமடைந்தவராவார்.
வவுனியாவில் அதி கூடிய வயதில் மரணித்த முதலாவது மூதாட்டியாக இவரே கணிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam