20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் புதிய தடத்தை பதித்த அமெரிக்கா
பரிஸ் ஒலிம்பிக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா ஒரு புதிய சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை தனதாக்கியதன் மூலம் அமெரிக்கா இந்த சாதனையை படைத்துள்ளது.
பரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற 100 மீற்றர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
[R1THNLU ]
9.79 வினாடிகள்
போட்டித்தூரத்தை 9.79 வினாடிகளில் கடந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஜமைக்காவின் கிஷான் தாம்சன் வெள்ளி பதக்கத்தையும், மற்றொரு அமெரிக்க வீரரான பிரெட் கெர்லி வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
2004 ஏதென்ஸ் விளையாட்டுப் போட்டியில் 100 அ ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லின் வென்ற தங்கப்பதக்கத்திற்கு பிறகு 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்கா பெற்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |