அரசாங்கத்திற்கு எதிராக 1000 பேரணிகள்.. சூளுரைக்கும் எதிர் தரப்பு!
அரசாங்கத்திற்கு எதிராக 1000 பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் நுகேகொடை பேரணி தொடர்பான வேலைத்திட்டங்களை பார்வையிட சென்ற போதே அவரை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொர்ந்து பேசிய அவர்,
நாடகத்தை வெளிப்படுத்துவோம்
“இந்த பேரணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் சுயாதீனமாக கலந்து கொள்வார்கள் என நம்புகிறோம். இது அரசாங்கத்திற்கு எதிரான அமைக்கப்படும் கட்சியல்ல. அரசாங்கத்திற்கு எதிரான எமது போராட்டத்தின் ஆரம்பமாகும்.
அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் பேருந்து மற்றும் தொடருந்துகளில் செல்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போது கெப் வாகனம் கேட்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தி நடிக்கும் இந்த நாடகத்தின் உண்மை தன்மையை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறோம். இவர்கள் 159 பேரும் தோல்வியடைந்துள்ளனர். எங்கள் கட்சியின் பாசையில் சொல்வதென்றால், யானையின் வாலை மட்டுமே ஆட்டுகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam