நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலைமையானது, அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைகக்ளம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாழமுக்க நிலைமை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அவ்வப்போது மழை அல்லது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிா்வுகூறப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவா, மத்திய, ஊவா, தென், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடி மின்னலின் போது ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam