எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் கழிவறையை பயன்படுத்தியதற்காக பணம் அறவிட்ட நபர்
ஹோமாகம பகுதியில், பொதுமகன் ஒருவர் கழிவறையை பயன்படுத்தியதற்காக 100 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற நபரிடமே இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளது.
எரிபொருள் வரிசையில் பல நாட்கள் வரிசையில் காத்திருந்த நபர், கழிவறைக்குச் செல்வதற்காக அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று கேட்டுள்ளார்.
நூறு ரூபா பணம் வசூலித்த கடை உரிமையாளர்
அந்த கடை உரிமையாளர் கடையின் பின்னால் உள்ள கழிவறையை காட்டி அங்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
கழிவறைக்குச் சென்று மீண்டும் திரும்பும்போது குறித்த நபர் கடை உரிமையாளரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக கடை உரிமையாளர் அந்த நபரிடம், கழிவறையைப் பயன்படுத்தியதற்காக 100 ரூபாய் பணம் வசூலித்துள்ளார்.
பின்னர் கடை உரிமையாளரிடம் 100 ரூபாயை கொடுத்துவிட்டு அந்த நபர் கடையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
