தீப்பற்றிய கப்பலுக்கு 100 பில்லியன் ரூபா இழப்பீடு - அமைச்சர் வெளியிடும் தகவல்
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால், கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலின் உரிமையாளர்களிடமிருந்து இழப்பீடு பெறுவதற்கான உரிமை கோரல்களை இன்னும் இலங்கை சமர்ப்பிக்கவில்லை என அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொது சுகாதார அமைச்சர் டாக்டர் நாலக கொடஹேவா இதனை தெரிவித்துள்ளார் .
இடைக்கால நட்டஈடு உரிமையை கோருவதற்காக இன்னும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.
உரிமைகோரல் குறித்து ஒரு முடிவை எட்டுவதற்காக சட்ட மா அதிபர் நாளை சம்பந்தப்பட்டவர்களை சந்திக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கூறினார்.
முழுமையான கோரிக்கையை தீர்மானிப்பதற்கு முன் பல்வேறு அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கொடஹேவா தெரிவித்தார்.
இழப்பீடு 100 பில்லியன் ரூபாவாக இருந்தாலும் சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய
முடியாது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்பு கூறியிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.