அனுமதியின்றி செயல்பட்ட உணவு நிறுவனம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில், தேவையான அனுமதிகள் மற்றும் சுகாதாரச் சான்றிதழ்கள் இன்றி செயல்பட்ட உணவு வழங்கும் சேவை நிறுவனம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் ரூ.100,000 அபராதம் விதித்துள்ளது.
இந்த வழக்கு, பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு பொதியிடல்
குறித்த நிறுவனம், பருத்தித்துறை நகரசபையின் அனுமதி பெறாமல் இயங்கியதுடன், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வழங்கப்படும் உணவு வளவுப்பதிவுச் சான்றிதழும் பெறாத நிலையில் உணவு பொதியிடலில் லஞ்சீற் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட நீர் குடிப்பதற்கு தகுதியானதா என்பதை உறுதிப்படுத்தத் தவறியதுடன், உணவைக் கையாண்ட பணியாளர்களிடம் உடல்நலத்தகுதி மருத்துவச் சான்றிதழ்களும் இல்லாதமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், தனிநபர் சுகாதார விதிமுறைகள் பேணப்படாமை மற்றும் வெளிச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடிய இடத்தில் உணவு தயாரிக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம், குறித்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் ரூ.100,000 அபராதமும் விதித்துள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam