இலங்கைக்கு ஒரு நாளில் வருகை தந்த பல தனியார் ஜெட் விமானங்கள்!
இந்தியா-பாகிஸ்தான் டி20 போட்டியை பார்வையிட கிரிக்கெட் ரசிகர்களை ஏற்றிக் கொண்டு 10 இற்கும் மேற்பட்ட தனியார் ஜெட் விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னதாக பல வணிக ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் பாரிய வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது.
இந்த சிறப்புமிக்க வெற்றியின் மூலம் “A” குழுவிலிருந்து “சுப்பர் 8 (Super 8)” சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணியாக இந்திய அணி தெரிவாகி உள்ளது.
இதேவேளை, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண கொழும்பிலுள்ள ஆர்.பிரேமதாஸ மைதானத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri