இலங்கையில் நீண்ட கால கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்படும் குழந்தைகள்!
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 10 சதவீத குழந்தைகள் நீண்ட கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரியின் (SLCP) பேராசிரியர் குவானி லியனகே (Prof. Guwani Liyanage) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் (HPB) ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“பெரியவர்களிடையே நீண்ட கால கோவிட் பாதிப்பு அதிகமான இருந்தாலும், குழந்தைகளும் பாதிக்கப்படலாம்.
தற்போது, இலங்கையில் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை, எனினும், வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட பிறகு ஒரு குழந்தை காட்டக்கூடிய 200 க்கும் மேற்பட்ட அறிகுறிகள் உள்ளன.
அவற்றில் இருமல், சுவாசிப்பதில் சிரமம், தலைவலி, சோம்பல் மற்றும் ஆர்வமின்மை ஆகியவை அடங்கும். மூன்றாவது அலையின் போது அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே, வைரஸின் நீண்டகால அறிகுறிகளுடன் கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். அவர்கள் பங்கேற்பு இல்லாமை, வகுப்பு நடவடிக்கைகளில் குறைவான உற்சாகம் போன்றவற்றைக் கொண்டிருக்கலாம்.
பெற்றோர்களைப் போலவே, ஆசிரியர்களும் குழந்தைகள் மீது அவதானமாக இருக்க வேண்டும். இதையும் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, குழந்தை தகுதியுடையதாக இருந்தால், பெற்றோர் அவருக்கு அல்லது அவளுக்கு கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அத்துடன், வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri