பெண்ணொருவர் உட்பட மேலும் 10 பேர் ஹெரோயினுடன் கைது!
நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் பெண்ணொருவர் உட்பட 10 பேர் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மட்டக்குளி பொலிஸ் பிரிவில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 25 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் வியாபாரத்தினூடாகப் பெற்றக்கொண்ட 8 இலட்சம் ரூபாவையும் குறித்த நபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மட்டக் குளிபிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேவத்த பிரதேசத்தில் பியகம பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பியகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பிரதேசத்தில், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 20ஆம் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 530 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமித்திபுர பிரதேசத்தில், கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 510 மில்லிகிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திட்டிய பாலத்துக்கு அருகில் கல்கிஸை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 850 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கப்புர பிரதேசத்தில் தலங்கம பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹோக்கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். தலங்கம, வத்தளை ஆகியப் பகுதிகளிலும் 7 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயினுடன் 43, 55 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri