கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் சிக்கிய 9 தாய்லாந்து பெண்கள் உட்பட்ட 10 பேர் கைது!
கொழும்பு - கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் நீண்ட காலமாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதியில் இருந்து ஒன்பது தாய்லாந்து பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்தியப் பிரஜை போன்று மசாஜ் நிலையத்துக்குள் சென்று தகவல்களைத் திரட்டி பின்னர் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
மசாஜ் நிலையம்
கைது செய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் அடங்குகின்றார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகர்கள் பலர், இந்த விடுதிக்கு வருகை தருவதாக மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |