ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் 10 மணித்தியாலங்கள் விசாரணை
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணியாற்றிய சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய விசேட பொலிஸ் குழுக்கள் இரண்டு நேற்று ஹட்டன் - டயகம பிரதேசத்தில் விசாரணை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாகவும் சிறுமியின் தாயாரிடம் வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மட்டும் 10 மணித்தியாலங்கள் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் நியாயமான விசாரணை மேற்கொள்ளுமாறு நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam