பாகிஸ்தானில் குளிர்சாதனபெட்டி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி - செய்திகளின் தொகுப்பு
பாகிஸ்தானில் வீடொன்றில் வைத்திருந்த குளிர்சாதனபெட்டி திடீரென வெடித்துச் சிதறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உடல் சிதறி பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப்பின் தலைநகர் லாகூரில் மெகல்லா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது.
இந்த நிலையில், அவர்களின் வீட்டிலிருந்த குளிர்சாதனபெட்டி நேற்று (12.07.2023) நள்ளிரவு 2 மணியளவில் அதிக சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அருகில் இருந்த மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |