10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது - ஆய்வில் வெளியான தகவல்
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை 10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது என பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை நாட்கள் வரை வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வின் படி, கோவிட்டினால் பாதிக்கப்பட்ட 10இல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பிறகும் தொற்று நீடித்திருப்பது கண்டறிப்பட்டது.
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து அதன் ஆய்வு முடிவுகளை சர்வதேச தொற்று நோய் இதழில் பிரித்தானியா வெளியிட்டது.
கோவிட் உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, ஆர்என்ஏ அடிப்படையில் ஒரு புதிய வகை பரிசோதனையை மேற்கொண்டதில், சில தொற்றாளர்களுக்கு தொற்று 10 நாட்களையும் தாண்டி நீடித்திருப்பது கண்டறியப்பட்டது. சிலருக்கு 68 நாட்கள் வரை இந்த நிலை நீடித்திருக்கிறது.
எனவே, கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகைத்தருபவர்கள் அனைவருக்கும் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது என இந்த ஆய்வின் முடிவு அறிவுறுத்துகின்றது.

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
