தேர்தலுக்கு தயாராகியுள்ள 10 வேட்பாளர்கள்
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை பத்து வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன மற்றும் கே.கே பியதாச ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அதேவேளை, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தேசிய ஜனநாயக முன்னணி சார்பிலும், ஓசல ஹேரத் அபிநவ நிவாஹல் பெரமுனவின் சார்பிலும், ஏ.எஸ் பி லியனகே தொழிலாளர் கட்சியின் சார்பிலும், சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு
மேலும், பி.டபில்யூ.எஸ்.கே பண்டாரநாயக்கவினால் ஜாதிக சன்வர்தன பெரமுன சார்பிலும், அஜந்த டி சொய்ஸாவினால் ருஹுணு ஜனதா கட்சி சார்பிலும், சிறிதுங்க ஜெயசூரியவினால் சோசலிச கட்சி சார்பிலும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடைசி நிமிட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பணவைப்புகளை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |