கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! மூவர் படுகாயம்
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர், அட்டப்பள்ளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று(31) இரவு இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று 19 பிரிவு காசிம் ஆலிம் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சம்சுதீன் சஹாப்தீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று பகுதியில் நோக்கி பிரதான வீதியில் டொல்பின் ரக வான் ஒன்று பயணித்துள்ளது.
இந்நிலையில் அட்டப்பள்ளம் பகுதியில் வைத்து வானின் ரயர் ஒன்று வெடித்ததையடுத்து வான் வேககட்டுப்பாட்டை மீறி எதிரே அக்கரைப்பற்றிலிருந்து நிந்தவூருக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், மகனும் பிரயாணித்த மோட்டார் சைக்கிளுடனும் ,இன்னொரு மோட்டார் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை உயிரிழந்ததுடன் மகன் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வானைச் செலுத்திய சாரதியைக் கைது செய்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 10 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri