டித்வா பாதிப்பு: ஜனாதிபதி நிதியம் ஒதுக்கிய பெருந்தொகை பணம்
' 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கு ரூ.10,000 கொடுப்பனவை வழங்க ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களால் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வழங்குவதற்கான ஏற்பாடுகள்
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் கல்வியைப் பேணுவதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ரூபா.25,000 வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதில் ரூபா.15,000 பொது திறைசேரியிலிருந்தும் ரூபா.10,000 ஜனாதிபதி நிதியிலிருந்தும் வழங்கப்படும்.

அதன்படி, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் வழங்கும் ரூ.10,000 கொடுப்பனவு தற்போது முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிதி நிவாரணம் விரைவில் மற்ற மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri