தென் கொரியாவிற்கான இலங்கைத் தூதுவராக மாரிமுத்து பத்மநாதன்
தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதுவராக மாரிமுத்து பத்மநாதனை நியமிப்பதற்கு உயர்பதவிகள் குறித்த நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, இந்தோனேசியா, பிரேசில், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் மற்றும் அமைச்சுச் செயலாளர் ஆகியோருக்கான நியமனங்களை உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழு அனுமதித்துள்ளது.
இந்த குழுக் கூட்டம் கடந்த ஜூலை 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
நியமனங்கள்
இதன்போது பின்வரும் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.அதன்படி, சுமதுரிகா சஷிகல பிரேமவர்தன – இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவர்
சி.ஏ. சாமிந்த இனோக்கா கொலொன்னே – பிரேசிலுக்கான இலங்கை தூதுவர்
மொஹமட் ரிஸ்வி ஹஸன் – மாலைத்தீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்
எல்.ஆர்.எம்.என்.பி.ஜி.பி. கடுருகமுவ – துருக்கிக்கான இலங்கை தூதுவர்
ருவந்தி டெல்பிட்டிய – நேபாளத்துக்கான இலங்கை தூதுவர்
மாரிமுத்து கே. பத்மநாதன் – தென் கொரியாவுக்கான இலங்கை தூதுவர்
அயிஷா ஜினஸேனா (வழக்கறிஞர்) – நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாளராக நியமனம்
இந்த உயர் பதவிகள் குழுவை பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடத்தப்பட்டு, உறுப்பினர்களாக குமார ஜயகொடி, அனில் ஜயந்த, ஹர்ஷன நானயக்கார, உபாலி பன்னிலாகே, சரோஜா சவித்ரி பவுல்ராஜ், ஹன்ஸக விஜேமுனி, ரிஷாட் பதியூதீன், தயாசிறி ஜயசேகர மற்றும் நிசாம் கரியப்பர் ஆகியோர் பதவி வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் உள்ள வெறும் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்க திட்டம்: முன்னாள் எம்பி மு.சந்திரகுமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
