Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலக்குவைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அச்சுறுத்தல் காணொளிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படைவீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் கடுமையான முடிவுகளை எடுப்போம் என்ற தொனியில் வெளியிடப்பட்டுள்ள காணொளிகள், சிங்கள மொழி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
30 ஆண்டுகளாக நாட்டுக்காகப் போராடிய படைவீரர்களை எவ்வாறு தண்டிக்க முடியும் என்ற கேள்வியும் குறித்த காணொளிகளில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ அச்சுறுத்தி தீர்மானங்களை மாற்றவைக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராகச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பௌத்த தேரர்களின் போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான அச்சுறுத்தல் காணொளிகளின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை எடுத்துவருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கில் உள்ள அதன் நட்பு நாடுகளுக்கும் ‘பாரிய சேதம்’ ஏற்படும் என ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று(18) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரிய சேதம்
“அவர்கள் எம்மைத் தாக்கத் துணியமாட்டார்கள் என மக்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம். அவ்வாறு தாக்கினால், அவர்களுக்கும் இப்பிராந்தியத்திற்கும் பாரிய சேதம் ஏற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அசீஸ் நசீர்சாதே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் அரச தொலைக்காட்சியின்படி, நாடாளுமன்றத்தில் வாக்களித்த 277 உறுப்பினர்களில் 237 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
இராணுவப் பதவி நிலை இல்லாத போதிலும், அக்லாகி பாதுகாப்பு அமைச்சில் 42 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
மேலும், 2013ஆம் ஆண்டு முதல் ஈரானின் பாதுகாப்புத் தொழில்துறை அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அணுவாயுதம் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபை அவருக்கு 2007ஆம் ஆண்டு தடைகளை விதித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள வீட்டுப் பணிப்பெண்கள் எண்ணிக்கையில் இலங்கைத்
தொழிலாளர்கள் இரண்டாம்
இடத்தில் உள்ளனர்.
குவைத்தின் சிவில் தகவல்களுக்கான பொது அதிகாரசபை (PACI) வெளியிட்ட தரவுகளில்
இருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியான புதிய தகவல்
குவைத்தில் உள்ள மொத்தம் 883,308 வீட்டுப் பணியாளர்களில் 86.1% பேர் (760,744
பேர்) இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு ஆசிய
நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதில் 344,532 தொழிலாளர்களுடன் (39%) இந்தியா முதலிடத்தில் உள்ளது.
157,901 தொழிலாளர்களுடன் (17.9%) இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.
பிலிப்பைன்ஸ் 151,369 தொழிலாளர்களுடன் (17.1%) மூன்றாம் இடத்திலும்,
பங்களாதேஷ் 106,942 தொழிலாளர்களுடன் (12.1%) நான்காம் இடத்திலும் உள்ளன.
எஞ்சிய 13.9% (சுமார் 122,564 தொழிலாளர்கள்) பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணியை  வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.
பாகிஸ்தான் அணி
இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸும், பாகிஸ்தான் அணிக்கு ஷஹீன் அப்ரிடியும் தலைமை தாங்கினர்.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சல்மான் ஆஹா 107 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தார்.
இதனையடுத்து, 306 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி
இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 79 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 60 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிலர் சிறப்பாகச் செயற்பட்ட போதிலும், பின்வரிசை வீரர்களால் எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டங்களைப் பெற முடியவில்லை.
இதனால் வெற்றியை நெருங்கியிருந்த இலங்கை அணி 37 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தனது பயணத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
ஞானசார தேரர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான அரசியல் முயற்சியாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஞானசார தேரர்
ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்த அவர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைய அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுவதைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
பொதுமன்னிப்பு
ஞானசார தேரருக்கு உடனடியாகப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர்,
நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கும், முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஒருவருக்கும் இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், நாட்டில் இனவாதம் தொடர்ந்தும் தலைதூக்கும் நிலை ஏற்படலாம் எனத் தெரிவித்தார்.
எனவே, நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தாம் கௌரவமாக ஏற்றுக்கொள்வதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தக்கூடாது என்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் தெற்கே உள்ள நஜ்ரான் நகரில் ஏவுகணை ஒன்று
வீழ்ந்ததில் 6 பேர் காயமடைந்துள்ளதாக சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது 3 வீடுகளும், 3 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எச்சரிக்கை
முன்னதாக, இந்த பகுதியில் சாத்தியமான ஆபத்து குறித்து தேசிய முன்கூட்டிய
எச்சரிக்கை தளம் முன்னதாக எச்சரிக்கை
விடுத்திருந்தது.
2024 ஆம் ஆண்டின் பொருளாதார மாற்றச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள மந்தகதி குறித்து முன்னாள் சபாநாயகர்
கரு ஜயசூரிய தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் ஏற்படும் தாமதம்,
நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்
எச்சரித்துள்ளார்.
சட்டத்தின் கீழ் இலங்கையின் ஏற்றுமதி இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஆக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அது தற்போது 16% என்ற அளவிலேயே
உள்ளது.
முதலீட்டுக்கான இலக்குகள்
அந்நிய நேரடி முதலீட்டுக்கான இலக்குகள் எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்த
மட்டத்திலேயே காணப்படுகின்றன.
நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு மாற்றம் ஏதுமின்றி 6.85 பில்லியன்
அமெரிக்க டொலர்களாகவே தொடர்கிறது.முதலீட்டுச் சபையுடன் தொடர்புடைய நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள்
ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்தநிலையில், பொருளாதார மாற்றச் சட்டமானது தெளிவான இலக்குகளை
நிர்ணயித்துள்ளதாகவும், அதன் முன்னேற்ற அறிக்கைகள் ஆண்டுதோறும்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
கஸ்ஸப தேரர் மீண்டும் விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (17.10.2026) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பதற்றமான சூழ்நிலை
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சுயவிருப்பின் ​போில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரகப் போராட்டம் இன்று (18.10.2026) தொடர்ந்து 3வது நாளாகவும் நீடிக்கிறது.
you may like this video
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள சாட்சிகள் நேரலை காணொளி ஒளிபரப்புத்
தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றங்களில் சாட்சியமளிப்பதற்கு
வசதியாக, சிவில் நடைமுறைச் சட்டக் கோவையில் திருத்தம்
செய்வதற்கான புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் உத்தியோகபூர்வ வர்த்தமானி
அறிவித்தல் மூலம் இந்தச் சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தரப்பினரின் உடன்பாடு, நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது கோரிக்கைகளின்
அடிப்படையில் சாட்சிகள் காணொளி வாயிலாக சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு
அதிகாரம் அளிக்கப்படும்.
சட்டவிரோதப் பதிவு
அத்துடன் இந்த வசதியின் மூலம், வெளிநாடுகளில் உள்ள சாட்சிகள் இலங்கைக்கு வருகை
தராமலேயே சாட்சியமளிக்க முடியும்.
இதற்காக இலங்கைத் தூதரக அதிகாரிகள் அல்லது
சட்டத் தரணிகள்/அறங்கூறுநர்கள் ஆணையாளர்களாக நியமிக்கப்படலாம். நோய் அல்லது உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்திற்கு வர முடியாத சாட்சிகள்,
தங்களது வீடுகளில் இருந்தவாறே சாட்சியமளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
சாட்சிகளின் அடையாளம், இரகசியத்தன்மை மற்றும் சட்டவிரோதப் பதிவுகளைத் தடுத்தல்
ஆகியவற்றுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வழக்கமான
நீதிமன்றச் சாட்சியங்களுக்கு இணையான சட்டப்பூர்வத் தன்மை இதற்கு வழங்கப்படும்
இதேவேளை, குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே
சட்டமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்கள் முன்னெடுத்து வரும்
தொடர் போராட்டம் இன்று (18.10.2026) ஆறாவது வாரமாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் தமது பூர்வீகக் காணிகளை விடுவித்து, அவற்றில்
மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டங்கள்
இதேவேளை, பலாலி உள்ளிட்ட பகுதிகளில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது
பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மற்றும் பலாலி சாந்தி உள்ளிட்ட
பகுதிகளிலும் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
நுரைச்சோலை மின்நிலையம் மேலும் சில நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று(17.10.2026) ஏற்பட்ட திடீர் மின்சார விநியோகத் தடையை தொடர்ந்து,
பாதுகாப்பு நடைமுறைகளின்படி நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் தேசிய
மின்வழங்கல் கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.
தேவையான நடைமுறைகள் முடிவடையும் வரை, அது மேலும் சில நாட்களுக்கு மீண்டும்
இணைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்மின் உற்பத்தி
இதன் மூலம் 810 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக இழக்கப்படுவதால் நாட்டின்
மின் விநியோகத்தில் கூடுதல் அழுத்தம் ஏற்படும்.
எனினும், தொடரும் மழைக்காலம் காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகபட்ச அளவில்
முன்னெடுக்கப்படுவதாலும், மின்சார தேவையின் வீழ்ச்சி காரணமாகவும் மின்
அமைப்பின் மீதான அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று ஏற்பட்ட நாடு தழுவிய மின்முடக்கத்திற்கான சரியான காரணம்
மற்றும் நிகழ்வுகளை கண்டறிய உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.