டி20 உலகக் கோப்பை 2026: அஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்ற ஜிம்பாப்வே அணி
டி20 உலகக் கோப்பை தொடரின் 19வது போட்டியில் சிம்பாப்வே மற்றும் அஸ்திரேலியா அணிகளுக்கதிரான போட்டியில் சிம்பாப்வே அணி அபார வெற்றிப்பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் சிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று(13) மோதுகின்றன.
அவுஸ்திரேலியா அணி
கொழும்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களான ப்ரியன் பென்னெட், தடிவனஷெ ஓட்டங்களை குவிப்பில் கவனம் செலுத்தினர்.

தடிவனஷெ 21 பந்துகளில் 35 ஓட்டங்கள் (7 பவுண்டரிகள்) அடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் புரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 30 பந்துகளில் 35 ஓட்டங்களை (4 பவுண்டரிகள்) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் சிக்கந்தர் ராஸா தன் பங்கிற்கு 25 ஓட்டங்களை சேர்த்தார். போட்டி முடிவில் சிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை குவித்துள்ளது.
சிம்பாப்வே அணி
சிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ஓட்டங்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்தார்.
இதனையடுத்து அவுஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் இங்கிலிஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் இங்கிலிஸ் 8 ஓட்டங்களிலும் அடுத்து வந்த கேமரூன் கிரீன், டிம் டேவிட் ஒரு ஓட்டங்களும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 17 ஓட்டங்களினல் வெளியேறினார். இதனையடுத்து மேக்ஸ்வெல்- மேட் ரென்ஷா ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய மேக்ஸ்வெல் 32 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 6, பென் த்வார்ஷுயிஸ் 6 என ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய மேட் ரென்ஷா அரை சதம் எடுத்தார்.
தொடர்ந்து போராடிய அவர் 65 ஓட்டங்களில் வெளியேறினார். இதனால் அவுஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam