ரஷ்யா மீது கடுமையான அழுத்தம்.. முக்கிய தலைவர்களுடன் பேசிய ஜெலென்ஸ்கி
போர்நிறுத்த பேச்சுவார்த்தையை குறித்து, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஸ்டார்மர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரஷ்யா மீது கடுமையான அழுத்தம் பிறப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த பதிவில், "பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ், பிரதமர்கள் ஸ்டார்மர் மற்றும் டஸ்க் ஆகியோருடன் பேசினோம்.
இஸ்தான்புல் சந்திப்பு
இதன்போது, இஸ்தான்புல்லில் நடந்த சந்திப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம்.
உண்மையான அமைதியைக் கொண்டுவர உக்ரைன் விரைவான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளது, மேலும் உலகம் ஒரு வலுவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது முக்கியம்.
Spoke with @POTUS together with President Macron, Federal Chancellor Merz, Prime Ministers Starmer and Tusk. We discussed the meeting in Istanbul.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) May 16, 2025
Ukraine is ready to take the fastest possible steps to bring real peace, and it is important that the world holds a strong stance.… pic.twitter.com/CG3pAnN5Ip
ரஷ்யர்கள் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தையும் கொலைகளுக்கு முற்றுப்புள்ளியையும் நிராகரித்தால், கடுமையான தடைகள் பின்பற்றப்பட வேண்டும்.
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாராகும் வரை ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |