இலங்கையில் ஆபத்தானவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களின் செயற்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் அது மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
இந்நிலையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்கள் முற்றாக ஒழிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதிக்குள் பாதாள உலகத்தை அமைதிப்படுத்தாவிட்டால், அடுத்த மாத இறுதிக்குள் முற்றாக ஒழிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிரடி படையினர்
பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேடமாக பயிற்சி அளிக்கப்பட்ட அதிரடி படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கை இன்று பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இன்றையதினம் 20 விசேட பொலிஸ் குழுக்கள் தமது பணியை பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.