தனது சபதத்தை நிறைவேற்ற போராடும் பொது பாதுகாப்பு அமைச்சர்
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குற்றக் கும்பல்களை ஒழிப்பதாக செய்த சபதத்திற்கமைய யுக்திய நடவடிக்கையை நிறுத்துவதற்கு தாம் அனுமதிக்க போவதில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை சமூக பொலிஸ் பிரிவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,யுக்திய நடவடிக்கையானது சர்வதேச அழுத்தங்கள் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டது.

எவ்வாறாயினும், தான் பொது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் காலத்தில், இலங்கை மக்களுக்கான தனது கடமைகளை நிறைவேற்றுவேன். சர்வதேச சமூகத்தை மகிழ்விப்பதற்காக அல்ல.
சவால்கள்
‘யுக்திய’ நடவடிக்கையானது நாட்டிற்குள் இருந்தும் சவால்களை எதிர்கொண்டது இருப்பினும் ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் இந்த நடவடிக்கை தொடரும்.

பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது என்று கூறியுள்ளார்.
சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan