யுகதனவி உடன்படிக்கை இரு வாரங்களுக்கு முன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது : விமல் வீரவங்ச
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தப்பட் உடன்படிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதால், அந்த உடன்படிக்கை வேறு தரப்பின் கைகளுக்கு சென்றமை ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல என அமைச்சர் விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உடன்படிக்கையை மறைக்கும் நோக்கம் இருந்தால், அரசாங்கம் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்திருக்காது எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாட்டுக்கு முன்னால் பாரதூரமான பொருளாதார சவால் இருப்பதாகவும் இது சம்பந்தமான உண்மையான விடங்களை கூறி மக்களுக்கு தெளிவுப்படுத்தி, அதில் மீண்டு வர நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே சவாலில் இருந்து வெளியில் வர முடியும்.
உண்மையை மக்களுக்கு மறைத்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும் என எண்ணினால் இது வெறும் மாயை எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக அமெரிக்க நிறுவனத்துடன் அரசாங்கம் செய்துக்கொண்ட உடன்படிக்கை அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு வழங்கவில்லை எனவும் அது பற்றி அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை எனவும் விமல் வீரவங்ச உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் கடந்த காலங்களில் குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் அமெரிக்க நிறுவனத்துடனான அந்த உடன்படிக்கை சமர்ப்பித்தார். இவ்வாறான சூழலில், குறித்த உடன்படிக்கை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது என தற்போது அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri