யுகதெனவ் அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய ஆதரவில்லை! - சுதந்திரக்கட்சி
கெரவலபிட்டிய யுகதெனவ் மின் உற்பத்தி (Yugadanavi Power Plant) நிலையத்தின் பங்குகள் அமெரிக்காவிற்கு விற்பனை செய்யதனை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் இராஜாங்க அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) இதனை தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையின் மூலம் நாட்டின் மின்சார உற்பத்தி ஏகபோக உரிமை வேறு நாட்டுக்கு செல்லும் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழிவிற்கு சுதந்திரக் கட்சி கரம் உயர்த்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உடன்படிக்கை மூலம் நேபாளத்தில் எரிபொருள் தொடர்பில் ஏற்பட்ட நிலைமை இலங்கையிலும் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த உடன்படிக்கையின் மூலம் மின்சார விநியோகத்தை அமெரிக்கா நிறுத்தினால் இலங்கைக்கு மின்சாரம் இல்லாமல் போகும் என தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
