தேசிய சாதனை படைத்துள்ள இலங்கை வீரர் யுபுன் அபேகோன்
தடகள வீரர் யுபுன் அபேகோன் சற்று முன்னர் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் புதிய தேசிய சாதனையையும், தெற்காசிய சாதனையையும் படைத்துள்ளார்.
இத்தாலியில் இடம்பெற்று வரும் தடகள போட்டியில் கலந்து கொண்டு அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அவர் இந்த சாதனையை 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 20.37 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதேவேளை, இத்தாலியில் நடைபெற்ற 12வது காஸ்டிக்லியோன் சர்வதேச போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் புதிய தெற்காசிய சாதனையை படைத்த யுபுன் அபேகோனுக்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Heartiest congratulations to Yupun Abeykoon on setting a new South Asian record in Men’s 200m at the 12th Castiglione International Meet in Italy. He now holds the South Asian record for both Men’s 100m and 200m. A remarkable achievement & a proud moment for Sri Lanka. 🇱🇰 pic.twitter.com/r058BPLjY1
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 22, 2022