கிளிநொச்சியில் பல நாட்களாக ஆடுகளை திருடிய இளைஞர்கள் கைது
கிளிநொச்சி - மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இரவில் ஆடுகளை திருடிய குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்டின் உரிமையாளர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த கைது நடவடிக்கை நேற்று(08.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் மற்றும் வீதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயங்களில் ஆடுகள் திருடப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு திருடப்படும் ஆடுகள் மோட்டார் சைக்கிள் மூலம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பெறுமதியை விட அரைவாசி விலைக்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ஆட்டின் உரிமையாளர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாக உரிமையாளர்களினால் இனங்காணப்பட்ட 05 ஆடுகள் தர்மபுரம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri