நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்: சஜித் பிரேமதாச சாடல்
பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் பெறுமதி சேர் வரி(VAT) உள்ளிட்ட அதிகளவான வரிச் சுமையை மக்கள் மீது இந்த அரசாங்கம் திணித்துள்ளமையே என கூறியுள்ளார்.
இதனால் இளைய சமூகம் எதிர்ப்பார்ப்பிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமற்ற நாட்டின் எதிர்காலம்
இலங்கையை விடவும் அபிவிருத்தி குறைந்த நாடுகள் நோக்கி இளைஞர் யுவதிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்திஜீவிகள், தொழில் வல்லுனர்கள் போன்றே இளைஞர் யுவதிகளும் நாட்டை விட்டு பெருவாரியாக வெளியேறிச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி அரசாங்கம் செயற்படத் தவறியுள்ளதாகவும் நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் ஆரோக்கியமானதல்ல என புரிந்து கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
