பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் நீக்கப்படாவிடின் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் : அருட்தந்தை மா.சத்திவேல்

Galle Face Protest Johnston Fernando Mahinda Rajapaksa 21st Amendment
By Kanamirtha May 26, 2022 09:59 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற போது பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் நீக்கம் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சித்திரவதையைத் தொடர்ந்து புரியாத மொழியில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே 21 வயதே நிரம்பிய சுந்தரலிங்கத்தின் 13 வருடங்களைச் சிறையில் கழிக்க வைத்துள்ளது. இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராகப் பாவிக்கப்பட்டுள்ளது என்பதற்கும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எத்தகைய வாழ்வு கொடுமைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதற்கும் கேதீஸ்வரனின் வழக்குத் தீர்ப்பு இன்னும் ஒரு உதாரணமாகும்.

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் நீக்கப்படாவிடின் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் : அருட்தந்தை மா.சத்திவேல் | Youth Lives Away If Anti Terrorism Law Not Amended

இனவாத மற்றும் மதவாதமும் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுப் பிணை இன்றி சிறையில் வாடும் இளைஞர்களின் இளமை, குடும்ப வாழ்வு, எதிர்காலம், சமூகப் பொறுப்பு அனைத்தும் பறிக்கப்பட்டு சிறையில் வாடுகின்றார்கள் என்பதைவிட உயிரோடு கொலை செய்யப்படுகிறார்கள் என்றே கூற வேண்டும்.

இத்தகைய சட்டத்தை உருவாக்கிக் கடந்த 43 ஆண்டு காலமாகப் பாதுகாத்துவரும் பேரினவாத ஆட்சியாளர்களே பயங்கரவாதிகள், ஜனநாயக கொலையாளிகள். ஏனெனில் தமிழர்களின் ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டத்தை அளிக்கவே இச்சட்டத்தை அன்று கொண்டுவந்தனர்.

2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் கொலைக்குக் காரணமானவர்கள் என மக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் சுதந்திரமாகச் சுகபோகம் அனுபவிக்க அப்பாவி முஸ்லிம்கள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். செல்வாக்கு உள்ளவர்கள் வெளியில் வந்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் நீக்கப்படாவிடின் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் : அருட்தந்தை மா.சத்திவேல் | Youth Lives Away If Anti Terrorism Law Not Amended

அதுமட்டுமல்ல காலிமுகத்திடலில் தற்போது நடைபெற்றுவரும் ஜனநாயக ரீதியிலான இளைஞர்களின் போராட்டத்தை அழித்தொழிக்கவும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவும் மூல காரணமானவர்கள் இந்நாள் வரையில் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

இது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்கக் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மகிந்த கஹந்தகம ஆகியோரின் கடவுசீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தப் போதும் இன்று வரையில் அதனை கையளிக்காது சட்டத்தை அவமதிக்கும் இவர்களுக்கு எதிராகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படல் வேண்டும்.

இது சாத்தியமா? அரசியல் யாப்பின் 21ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற இக் காலகட்டத்தில் பயங்கரவாத தடை சட்டம் திருத்த நீக்கம் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் தற்போதைய அரசியல் பொருளாதார கொந்தளிப்பான சூழ்நிலையில் கேதீஸ்வரன் போன்ற இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது'' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US