புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: சகோதரி படுகாயம்
வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தானது இன்று(25.7.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து வவுனியா நோக்கி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது குறித்த மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
அவரது சகோதரி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri