யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் மரணம் (Photos)
யாழ்.தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கொடிகாமம் - கச்சாய் வீதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கப் ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் வாங்கி தந்த அஜித் குமார்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா Cineulagam

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri
