யாழில் இளைஞனை சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸார்
நெல்லியடி(Nelliaddy ) பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 18ஆம் திகதி எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்னால் நின்றபோது, முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸார், என் மீது தாக்குதல் மேற்கொண்டு, கைவிலங்கு இட்டு, முச்சக்கர வண்டியின் உள்ளே கீழே போட்டு, தமது கால்களுக்குள் என்னை அழுத்தி பிடித்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு எதற்காக என்னை தாக்கி, கைது செய்தீர்கள் என கேட்ட போது, கேபிள் வயர்கள் வெட்டிய சம்பவம் தொடர்பில் என கூறினார்கள். எனக்கு அப்படியொரு சம்பவம் தெரியவில்லை.
பின்னர் எனக்கு கைவலி ஏற்பட்டு, நான் வலியினால் துடித்து என்னை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கூறிய போது மந்திகை வைத்தியசாலையில் என்னை அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri