காதலியை உளவு பார்க்க இளைஞரொருவர் செய்த மோசமான செயல்
காதலியை உளவு பார்க்க பெண் வேடத்தில் சென்ற இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடையை அணிந்து காலி புகையிரத நிலையத்திற்கு சென்று கொழும்பு செல்வதற்கான பயணச்சீட்டை வாங்கியுள்ளார்.
பெண் உடை அணிந்த ஆண் அடையாளம்
இதன்போது அவரின் குரலில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விசாரித்த போது பெண் உடை அணிந்திருந்தவர் ஒரு ஆண் என அடையாளம் கண்டுள்ளனர்.
இதனையடுத்து புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய காலி பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது இளைஞரிடம் பொலிஸார் மேற்கெண்ட ஆரம்ப விசாரணையில் தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞனுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம் காதலியை உளவு பார்க்கவே தாம் இவ்வாறு வேடம் பூண்டு புகையிரத நிலையத்திற்கு வந்ததாக இளைஞர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
