மட்டக்களப்பில் சைக்கிளில் சென்ற சிறுமியிடம் வழிப்பறி செய்த இளைஞர் கைது
மட்டக்களப்பு - பாரதி வீதியில் சிறுமியின் கழுத்தில் இருந்த மாலையை பறித்து சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவின் பாரதி வீதியில் சென்றவரினால் சிறுமி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க மாலை அறுத்துச்செல்லப்பட்டது தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியிருந்தனர்.
நேற்றுமுன்தினம் பாரதி வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரின் தங்கமாலையை துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் அறுத்துச் சென்றிருந்தார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து சீசீரிவி காட்சிகளைக்கொண்டு பொலிஸார் முன்னெடுத்துவந்த விசாரணைகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
